ADDED : அக் 22, 2025 08:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்.21ல் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப் படுகிறது.
அதன்படி திண்டுக்கல் ஆயுதப்படை மைதானம் காவலர் நீத்தார் நினைவிடத்தில் கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப் தலைமையில் ஏ.டி.எஸ்.பி.க்கள், மகேஷ், ரமேஷ்குமார், தெய்வம், டி.எஸ்.பி.க்கள் கார்த்திக், சங்கர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள், மறைந்த காவலர்களின் குடும்பத்தினர்கள், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
துக்கம் அனுசரிக்கும் விதமாக அனைவரும் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர்.அப்போது 48 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப் பட்டது.