/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலையில் கொட்டப்பட்ட கொய்யா பழங்கள்
/
சாலையில் கொட்டப்பட்ட கொய்யா பழங்கள்
ADDED : நவ 11, 2025 04:00 AM
திண்டுக்கல்: தாடிக்கொம்பு பைபாஸ் ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனத்தில் வந்த சிலர் ஹைபிரிட் ரக கொய்யாப் பழங்களை டன் கணக்கில் சாலையோரம் கொட்டிச்சென்றனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் கொய்யாப்பழங்களை பைகளில் அள்ளினர். பெட்டிகளில் அடைத்து வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பழங்கள் எதற்காக சாலையில் கொட்டப்பட்டது என்ற காரணம் தெரியாமல் போட்டிப்போட்டு பொதுமக்கள் பழங்களை அள்ளிச்சென்றனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி கூறுகையில்,'' சாலையில் உணவு பொருட்களை கொட்டக்கூடாது. கொட்டப்பட்ட கொய்யாப்பழங்கள் எதற்காக வீசி சென்றனர் என விசாரணை நடத்தி வருகிறோம். இது போன்று விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ''என்றார்.

