/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி பெருமாள் கோயிலில் முகூர்த்தக்கால்
/
பழநி பெருமாள் கோயிலில் முகூர்த்தக்கால்
ADDED : நவ 11, 2025 04:00 AM
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் கும்பிபிேஷக முகூர்த்தக்கால் நடும் பணி நடந்தது.
பழநி மேற்கு ரத வீதியில் முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இங்கு திருப்பணிக்காக ஏப்.17 ல் பாலாலயம் நடந்தது. பணிகள் முடிவுற நேற்று (நவ. 10) காலை கும்பிபிேஷக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலச பூஜை நடக்க கோயில் பிரகாரத்தில் எடுத்து வர முகூர்த்தக்கால் நடப்பட்டது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கந்த விலாஸ் விபூதி ஸ்டார் உரிமையாளர் செல்வகுமார் கலந்து கொண்டனர். இக்கோயில் கும்பாபிஷேகம் டிச. 1 ல் நடக்க உள்ளது.

