/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கருவேலங்களால் சூழப்பட்ட நங்காஞ்சியாறு
/
கருவேலங்களால் சூழப்பட்ட நங்காஞ்சியாறு
ADDED : நவ 11, 2025 04:00 AM

ஒட்டன்சத்திரம்: கருவேலங்களால் சூழப்பட்ட நங்காஞ்சியாறு, பாழடைந்து காணப்படும் சுகாதார வளாகம் என ஜவ்வாதுபட்டி ஊராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
ஜவ்வாதுபட்டி, ஜவ்வாதுபட்டிபுதுார், பருமரத்துப்பட்டி பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களும் அதிகம் உள்ளன. ஜவ்வாது பட்டியில் உள்ள சாக்கடையில் புல் பூண்டுகள் முளைத்து காணப்படுகிறது. பல இடங்களில் சாக்கடை குறுகலாக உள்ளது.
இந்த கிராமம் வழியாக செல்லும் நங்காஞ்சி ஆற்றில் கருவேல மரங்கள் ஆறே தெரியாத அளவிற்கு முளைத்துள்ளது. இதை துார்வார வேண்டும். இதன் வழியாக செல்லும் மார்க்கம்பட்டி ரோடு ஒரு இடத்தில் பள்ளமாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றுப்பாலத்தில் தெருவிளக்கு வசதியும் இல்லை. ஜவ்வாதுபட்டிபுதுாரில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி பாழடைந்து காணப்படுகிறது. பல பகுதிகளில் புதிதாக ரோடுகள் போடப்பட்டுள்ளது.

