/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பணம் பறித்த இருவர் மீது குண்டாஸ்
/
பணம் பறித்த இருவர் மீது குண்டாஸ்
ADDED : பிப் 15, 2026 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் தெய்வசிகாமணிபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஜவகர் நகரை சேர்ந்த சரவணகுமார் 40, புதுப்பட்டி ஜெயகிருஷ்ண கண்ணன் 22, ரவுண்ட் ரோடு புதூர் அஜித் சுரேந்தர் 25 ,என 3 பேரை நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
இதில் சரவணக்குமார், ஜெயகிருஷ்ண கண்ணன் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு குண்டாசில் நடவடிக்கை எடுக்க அனுமதிக்கோரி கலெக்டருக்கு எஸ்.பி.,பிரதீப் பரிந்துரை செய்தார். கலெக்டர் சரவணன் ஒப்புதல் அளிக்க இருவர் மீதும் குண்டாசில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

