ADDED : அக் 25, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: கசவனம்பட்டி கோயில் குருபூஜை விழா இன்று (சனிக்கிழமை) தீர்த்தாபிஷேகத்துடன் துவங்குகிறது.
கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் பிரசித்திபெற்ற மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. சுவாமியின் மகாசமாதி தினமான ஐப்பசி மூலம் நட்சத்திரத்தில், ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்த ஆண்டிற்கான குருபூஜை நாளை (அக். 26 ) நடக்க உள்ளது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காப்புகட்டி விரதம் துவக்கி உள்ளனர்.
தீர்த்த, பால் கலசங்களுடன், ஊர் விளையாடல் நடக்கும்.
இன்று (அக். 25) மதியம் 2:00 மணி முதல் தொடர் தீர்த்தாபிஷேகம் நடை பெறும். நாளை (அக். 26) மகா யாகம் நடத்தப்பட்டு யாக தீர்த்தம், ஆயிரத்து 8 படி பால் அபிஷேகத்துடன் குருபூஜை நடக்கும்.
அன்னதான கொடியேற்றத்துடன் சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம் நடக்கும்.

