/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கபடியில் சாதித்த குருவப்பா பள்ளி
/
கபடியில் சாதித்த குருவப்பா பள்ளி
ADDED : அக் 20, 2024 04:59 AM

நெய்க்காரப்பட்டி : திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடந்த வருவாய் மாவட்ட கபடி போட்டியில் 14 வயது பிரிவில் வெற்றி பெற்ற பழநி நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், இறுதி போட்டியில் திண்டுக்கல் எம்.எஸ்.பி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியுடன் மோதினர்.
இதில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.17 வயது பிரிவில் அணைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, ஒட்டன்சத்திரம் கே.ஆர்., அரசு மேல்நிலைப் பள்ளியை வென்ற குருவப்பா பள்ளி இறுதிப் போட்டியில் மட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியுடன் மோதி மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன் மூலம் நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப்பள்ளி 10 ஆண்டுகளாக தொடர்ந்து மாநில போட்டிக்கு தேர்வாகி சாதனைப்படைத்து வருகிறது. வெற்றி மாணவர்களை பள்ளி செயலர் ராஜ்குமார், பள்ளிக்கூட உறுப்பினர் ராஜா கவுதம், தலைமை ஆசிரியர் கீதா, உதவி தலைமை ஆசிரியை கல்பனா, முதுகலை ஆசிரியர் சுப்பிரமணி,உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பரணி, மகேஷ்குமார், சூரிய பிரகாஷ், சிவக்குமார், நிர்மலா பாராட்டினர்.