/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கபடியில் சாதித்த குருவப்பா பள்ளி
/
கபடியில் சாதித்த குருவப்பா பள்ளி
ADDED : அக் 23, 2025 03:56 AM

நெய்க்காரபட்டி: பழநி நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கபடி போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் பங்கு பெற்ற நிலையில் 14 வயது பிரிவு இறுதிப் போட்டியில் தர்மத்துப்பட்டி அரசு பள்ளி அணியுடன் மோதி முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
17 வயது பிரிவில் குருவப்பா பள்ளி அணி, மட்டப்பாறை அரசு பள்ளி அணியை வென்று திருச்சி மாவட்டத்தில் நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
19 வயது பிரிவில் குருவப்பா பள்ளி அணி ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளியை வென்று திருவண்ணாமலையில் நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
14, 17, 19 வயது மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று குருவப்பா பள்ளி சாதனை படைத்துள்ளது.
இவர்களை பள்ளி செயலாளர் ராஜ்குமார், பள்ளி குழு உறுப்பினர் ராஜாகவுதம், தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, உதவி தலைமை ஆசிரியை கல்பனா, நாகராஜ் உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பரணி, மகேஷ் குமார், சிவக் குமார், சூரியபிரகாஷ், ஐஸ்வர்யா பாராட்டினர்.