நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்; மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140ஐ திரும்ப பெற வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்தது.
கோட்டத் தலைவர் நந்தகோபால், கோட்டச் செயலாளர் பாலமுருகன், மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம் , மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன், மாநிலத் துணைத் தலைவர் ராஜமாணிக்கம் பங்கேற்றனர்.