ADDED : பிப் 08, 2025 05:37 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மெயின்ரோட்டில் ஹேப்பி சிட்டி புரோமோட்டர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் புதிய அலுவலகம் லட்சுமி விலாஸ் எனும் பெயரில் ஆர்.எம்.காலனி 6 வது குறுக்குத் தெருவில் நிறுவப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிறுவன சேர்மன் எஸ். கே. டி. ஏ. ஆர். கோபி, துணை சேர்மன்கள் அஜய்சூர்யா-மிருதுளா, கிருத்திக் சூர்யா வரவேற்றனர். நிர்வாக இயக்குனர் நாகலெட்சுமி கோபி திறந்து வைத்தார்.
ஜெயந்தி, மித்ரா அஜய், சுமதி பிச்சைகண்ணு, மாலா கனகு, பத்மாஸ்ரீ, பூங்கொடி குத்துவிளக்கேற்றினர்.அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜசேகர், ஆர்க்கிடெக் கார்த்திக்கேயன், ஸ்ரீஅம்மன் ப்ளூ மெட்டல் மயில்வாகனன், விக்னேஸ்வரா பைனான்ஸ் ராஜா, கிரானைட் வேர்ல்ட் நாகராஜ், நேஷனல் பில்டர்ஸ் இயக்குனர் தரிக் அஹமத், வழக்கறிஞர் கார்த்திக் ராஜா, சித்தாரா மகால் இயக்குனர்கள் அமானி அபு அயூப் அன்சாரி, முகமது காசிம் அர்ஷத், எல். ஐ .சி .வெங்கட்ராமன், கட்டட பொறியாளர் ஜாவித், ஹைடெக் புரோமோட்டர்ஸ் பாருக், ஸ்ரீவாசவி தங்க மாளிகை ரவி, ஜெயம் ஜுவல்லர்ஸ் ஜெயராமன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இணை பங்குதாரர்கள் சரவணபெருமாள், பாண்டியன், சங்கர் செய்தனர்.