/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமிக்கு தொல்லை: தொழிலாளிக்கு சிறை
/
சிறுமிக்கு தொல்லை: தொழிலாளிக்கு சிறை
ADDED : மார் 15, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கொடைக்கானல் கூக்கால் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணன்54.
இவர் 2022ல் அதே பகுதியை சேர்ந்த 11 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கிருஷ்ணனை,கைது சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி,குற்றவாளி கிருஷ்ணனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.3500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

