ADDED : டிச 16, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை,அறிவியல் கல்லுாரியில் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு நாள் கொண்டாடப்பட்டது.
தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார். பயிற்சியாளர்கள் கிருபாஸ்ரீ, மகேஸ்வரி மன அழுத்தத்தை போக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார்.
மாணவிகளுக்கு யோகா, தியான பயிற்சியில் அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு பணிகளை கணிதத்துறை உதவி பேராசிரியை சத்யஜோதி செய்தார்.