ADDED : ஜூன் 12, 2025 02:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. மதியம் திடீரென காற்றுடன் அரை மணி நேரம் கனமழை பெய்தது. தொடர்ந்து தரையிறங்கிய மேககூட்டம்என ரம்யமான சூழல் நிலவியது.
மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. மாலையில் மீண்டும் வெயில் பளிச்சிட இதமானசீதோஷ்ண நிலையை பயணிகள் அனுபவித்தனர். பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.