ADDED : மே 20, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், அத்திக்கோம்பை, தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி சுற்றிய கிராம பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது.
பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 6:30 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
தங்கச்சியம்மாபட்டியில் பெய்த கனமழை காரணமாக காய்கறி மார்க்கெட் முன்பு தாராபுரம் ரோட்டில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமம் அடைந்தனர்.