/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சூறைக்காற்றுடன் மழை; 2000 வாழை மரங்கள் சாய்ந்தன
/
சூறைக்காற்றுடன் மழை; 2000 வாழை மரங்கள் சாய்ந்தன
ADDED : மே 04, 2025 01:54 AM

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையால் குலை தள்ளிய நிலையில் இருந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் கீழே சாய்ந்தன.
ஒட்டன்சத்திரம் சுந்தரி பாளையத்தில் பல ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இவற்றில் அறுவடைக்கு தயாராக வாழைக்குலைகளுடன் 4 ஆயிரம் மரங்கள் இருந்தன. ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சூறாவளியுடன் மழை பெய்தது. காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வாழைக்குலைகளுடன் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.
விவசாயி சுரேஷ் குமார் கூறியதாவது: என் தோட்டத்தில் ரூ.3.5 லட்சம் செலவு செய்து 4 ஆயிரம் வாழை மரங்கள் நடவு செய்தேன். அவை அறுவடைக்கு தயாராக இருந்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விட்டன. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.