ADDED : ஜூன் 17, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்; கொடைக்கானலில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சூறைக்காற்று, சாரல் மழை என ரம்யமான சூழல் நிலவியது. மலைமுகடுகளை சூழ்ந்த பனிமூட்டம் நகரையும் சூழ்ந்தது.
தரையிரங்கிய மேகக் கூட்டம் என மலைநகர் சில்லிட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்த நிலையில் மழையில் நனைந்தபடி குடை பிடித்து சுற்றுலா தலங்களை பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி, ஏரியில் பனிமூட்டம், சாரல் மழைக்கிடையே படகு சவாரி செய்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மாலையில் இடைவிடாது சாரல் மழை காற்றுடன் பெய்தது.