/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் சூறாவளியுடன் சாரல் மழை: மின்கம்பம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

ADDED : நவ 28, 2024 02:54 AM

தாண்டிக்குடி:கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப் பகுதியில் சூறாவளி காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்த நிலையில் மின்கம்பம் சாய்ந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் இரு தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்த நிலையில் புல்லாவெளி அருகே மரம் விழுந்தது. தொடர்ந்து இதன் அருகே இருந்த மின்கம்பமும் ரோட்டில் சாய்ந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம், மின்கம்பத்தை பொதுமக்கள் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். நேற்று மாலை 4:00 மணி வரை காற்றுடன் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
மாலையில் சூறாவளி வீசிய நிலையில் மலைப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. கொடைக்கானலில் இடைவிடாத சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி நகர் வெறிச்சோடியது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவியது. குளிரை சமாளிக்க ஆங்காங்கே பொதுமக்கள் தீமூட்டி சமாளித்தனர்.