/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரெட்டியார்சத்திரம் பகுதியில் சாரல் மழை மக்காச்சோள விவசாயிகள் கவலை
/
ரெட்டியார்சத்திரம் பகுதியில் சாரல் மழை மக்காச்சோள விவசாயிகள் கவலை
ரெட்டியார்சத்திரம் பகுதியில் சாரல் மழை மக்காச்சோள விவசாயிகள் கவலை
ரெட்டியார்சத்திரம் பகுதியில் சாரல் மழை மக்காச்சோள விவசாயிகள் கவலை
ADDED : நவ 28, 2024 06:12 AM
ரெட்டியார்சத்திரம்: மக்காச்சோள கதிர் பால் பிடிக்கும் பருவத்தில் பெய்யும் சாரல் மழையால் ரெட்டியார்சத்திரம் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சில ஆண்டுகளாக போதிய மழையின்மை, தண்ணீர் பற்றாக்குறை, கொளுத்தும் வெயிலால் இப்பகுதியில் வழக்கமான சாகுபடி பாதிப்பை ஏற்படுத்த வெங்காயம், பயறுவகை, கொத்தமல்லி, சூரியகாந்தி, எள், பருத்தி சாகுபடி குறைந்தது. மக்காச்சோள சாகுபடி அதிகரிக்க துவங்கியபோதும் மகசூல் பாதிப்பு, விலை குறைவு பிரச்னைகள் உள்ளன.
படைப்புழு தாக்குதல் என பால் பிடிக்கும் பருவத்தில் மகசூலில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. இந்தாண்டு பரவலாக சாகுபடி அதிகரிக்க பல இடங்களில் கதிர்மணிகள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ள நிலையில் சாரல் மழையால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
விவசாயிகள் சிலர் கூறுகையில், பனிப்பொழிவு , சாரல் மழை தொடர்வதால் செடியிலே கதிர் முளைக்க வாய்ப்புள்ளது. தண்ணீர் தேங்கி நின்றாலும் பாதிக்கும். சாகுபடி செலவினத்தை மீட்க முடியாதோ என கவலை ஏற்பட்டுள்ளது ''என்றனர்.