ADDED : மே 18, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் குதிரை சவாரி செய்பவர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. ஏப். 22 ல் காரிய பட்டியை சேர்ந்த ஜோயல் கேப்சன் 9, குதிரை சவாரியின் போது காயமடைந்தார்.
இதையடுத்து பயணிகள் குதிரை சவாரி செய்ய அச்சமடைந்தனர். இதையடுத்து கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் குதிரை சவாரி செய்யும் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக 40 ஹெல்மெட் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார், செயலாளர் வெஸ்லி சார்லஸ், குதிரை சவாரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.