ADDED : டிச 25, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் : காசநோய் ஒழிப்பு , தொற்றாளர் நலக்கூட்டமைப்பு சார்பில் ஆத்துார் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது.
டாக்டர் லியோன் வினோத்குமார் தலைமை வகித்தார். காசநோய் பிரிவு அலுவலர் சிவஞான மூர்த்தி, 'சி' அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி, சித்தா மருந்தாளுனர் மனோகரன் முன்னிலை வகித்தனர்.
காசநோய் பிரிவு பணியாளர்கள் பாண்டியராஜன், கார்த்திகா தேவி, மரியம் மெரினா, ஜாக்குலின், ஆய்வக நுட்பவியலாளர் கவுசல்யா, உதவியாளர் நாகலட்சுமி பங்கேற்றனர். ஏற்பாடுகளை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் செய்திருந்தார்.

