sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிலோ ரூ. 5 க்கு குறைவாக விற்கும் மாங்காய் உதவலாமே தோட்டக்கலை; விலை கடும் சரிவால் விவசாயிகள் பரிதவிப்பு

/

கிலோ ரூ. 5 க்கு குறைவாக விற்கும் மாங்காய் உதவலாமே தோட்டக்கலை; விலை கடும் சரிவால் விவசாயிகள் பரிதவிப்பு

கிலோ ரூ. 5 க்கு குறைவாக விற்கும் மாங்காய் உதவலாமே தோட்டக்கலை; விலை கடும் சரிவால் விவசாயிகள் பரிதவிப்பு

கிலோ ரூ. 5 க்கு குறைவாக விற்கும் மாங்காய் உதவலாமே தோட்டக்கலை; விலை கடும் சரிவால் விவசாயிகள் பரிதவிப்பு


UPDATED : ஜூன் 05, 2025 10:16 AM

ADDED : ஜூன் 05, 2025 01:43 AM

Google News

UPDATED : ஜூன் 05, 2025 10:16 AM ADDED : ஜூன் 05, 2025 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் மா விவசாயிகளிடம் இருந்து மாங்காய் கிலோ ரூ.5 க்கும் குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதாலும், ரசாயன மருந்துகள் அதிகம் தெளிக்கப்பட்ட மாங்காய்களை மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் வாங்க மறுப்பதாலும் வரலாறு காணாத விலை சரிவால் ரூ.100 கோடி மேல் இழப்பை மா விவசாயிகள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, செந்துறை, அய்யலுார், பழநி, ஆத்துார் உள்ளிட்ட சுற்று கிராமங்களின் மக்களின் பிரதான தொழிலாக இருப்பது மா விவசாயம். இப்பகுதி விவசாயிகளில் 60 சதவீதத்துக்கு மேற்பட்டோர் மா விவசாயமே செய்கின்றனர். மா மரங்கள் குன்றுகள், மலைகளில் நட்டு வளர்ப்பது எளிதாக இருப்பதோடு மானாவாரி முறையில் வளர்க்கப்படுகிறது. இதனால் நத்தம் வட்டத்தில் மட்டும் 7080 எக்டேர், சாணார்பட்டி வட்டத்தில் 5004 எக்டேரில் விவசாயம் நடக்கிறது. இங்கு காசா, கல்லாமை, செந்துரம், பங்கன பள்ளி, அல்போன்சா, பென்னட் அல்போன்சா, டங்கன், மரகதம், தங்ககட்டி, இமான் பசந்த், மல்கோவா, நீலம், ரூபி என 25க்கு மேற்பட்ட வகை மாங்காய்கள் விளை விக்கப்படுகிறது.மா மரங்கள் ஆண்டுக்கு இருமுறை பலன் தருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் மா விவசாயிகள் பூச்சி தாக்குதல் இல்லாமல் இருக்க ஒன்று அல்லது இரண்டு முறை பூச்சி மருந்து தெளிப்பது வழக்கம். சிலர் பூச்சி மருந்துகளை தெளிக்காமல் இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வந்தனர். ஆனால் தற்போது மா விவசாயிகள் குறைந்தது 10 முதல் 15 முறை பூ பூப்பதற்கு, பிஞ்சுகள் பிடிப்பதற்கு, பிஞ்சுகள் உதிராமல் இருக்க, மரத்தில் தேன் வடியாமல் இருக்க, செல் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க என அதிகப்படியாக பூச்சி மருத்துகளை தெளித்து வருகின்றனர். இயற்கைக்கு மாறாக குறிப்பிட்ட ரசாயன மருந்துகளை பயன்படுத்தி விளைச்சல் செய்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தவறினால் மரம் பட்டுப்போய்விடும் நிலை உள்ளது.இயற்கைக்கு மாறாக ஆண்டு முழுவதும் மாங்காய் அறுவடை செய்யும் நோக்கில் இந்த முறையை பின்பற்றுவதால் எதிர்காலத்தில் மாமரங்களின் நிலை கேள்விகுறியாகும் நிலை உள்ளது. நான்கு ஆண்டுகளாக காலநிலை மாற்றம் ,அதிகப்படியான உற்பத்தியை பெருக்கும் நோக்கில் ரசாயன மருந்துகளை திணிப்பதால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு போதுமான விளைச்சல் இன்றி மா விவசாயிகள் பாதிப்பை சந்தித்து வந்தனர்.

இந்தாண்டு 50 சதவீதத்திற்கும் குறைவான மா விளைச்சல் மட்டுமே பரவலாக இருந்தது. இதற்காக பராமரிப்பு செலவு மாமரங்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்ட செலவுகள் என சராசரியாக கிலோவிற்கு 10 ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். ஆனால் மாங்காய் வியாபாரிகள் , மாம்பழ கூழ் தொழிற்சாலைகளில் கிலோ ரூ.5 க்கு கீழ் கொள்முதல் செய்கின்றனர். வரலாறு காணாத விலை சரிவிற்கு மாம்பழ கூழ் தொழிற்சாலைகளில் 2023 ,24 ஆண்டுகளில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள மாம்பழ கூல்கள் விற்பனை ஆகாதது முதல் காரணம்.

இதனால் மாம்பழ கூழ் தொழிற்சாலைகளில் மாங்காய் கொள்முதல்களை வெகுவாக குறைத்துள்ளனர். மேலும் மாங்காய் கமிஷன் மண்டிகளிலும் மாங்காய்களை வாங்க தயாராக இல்லை.இதனால் ஒரு லட்சம் டன்னிற்கும் மேற்பட்ட மாங்காய்கள் பறிக்கப்படாமல் மரங்களிலே விவசாயிகள் விட்டுள்ளதால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனை தடுக்க குறைந்தபட்ச மா கொள்முதல் விளையினை நிர்ணயிக்க தோட்டக்கலை துறை முன் வர வேண்டும்.

..........

மாங்காய்களை பறிக்காது வீண்

10 ஆண்டுக்கு முன் மா மரங்களுக்கு ஒன்று, இரண்டு முறை மட்டுமே பூச்சி மருந்து தெளிப்பார்கள். பலர் மருந்துகளே தெளிக்காமல் இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வந்தனர். தற்போது 10 முறைக்கு மேல் பூச்சி மருந்து தெளித்து மாங்காய் ளை ரசாயனம் மூலம் மட்டுமே விளைவிக்கின்றனர். இதனால் மாங்காய்கள் விளைவிக்க கிலோவிற்கு ரூ.10 வரை விவசாயிகள் செலவிடுகின்றன. ஆனால் தற்போது மாம்பழ கூழ் தொழிற்சாலைகளில் விவசாயிகளிடம் மாங்காய் வாங்குவதை பழைய ஸ்டாக் இன்னும் விற்பனை ஆகாததால் நிறுத்தி உள்ளனர். கோடவுன்களிலும் போதுமான விலை கிடைக்காததால் மாங்காய்களை பறிக்காமலே மரங்களில் தேக்கம் அடைந்து சேதம் அடையும் நிலை உள்ளது. இதனால் மாங்காய்களை உற்பத்தி செய்த விலை கூட கிடைக்காமல் விவசாயிகள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ரூ. 100 கோடி மதிப்பிலான மாங்காய்கள் தேக்கமடைந்து விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்க மாங்காய்களுக்கு நெல்,கரும்பு உள்ளிட்ட விவசாய பொருட்கள் போல் குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும். அரசு சத்துணவு உள்ளிட்ட விஷயங்களுக்கு மாங்காய்களை அரசே முன்வந்து கொள்முதல் செய்தால் மட்டுமே மா விவசாயிகள் சந்திக்கும் இழப்பை சரி செய்ய இயலும்.

சி.ஆர்.ஹரிஹரன், மாங்காய் கமிஷன் வணிகர்கள் சங்க தலைவர், வேம்பார்பட்டி, நத்தம்.

............






      Dinamalar
      Follow us