/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுலா தல விடுதிகளில் ரகசிய கேமரா சோதனை
/
சுற்றுலா தல விடுதிகளில் ரகசிய கேமரா சோதனை
ADDED : ஜன 04, 2025 04:25 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா தலங்களில் உள்ள பயணிகள் தங்கும் விடுதிகளில் ரகசிய கேமராக்கள் உள்ளதா என போலீசார் தனிக்குழு அமைத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் பெண்கள் உடை மாற்றும்,குளிக்கும் அறைகள்,தங்கும் விடுதிகளில் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகள் அந்தந்த மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் சிறுமலை,கொடைக்கானல், பழநி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தல விடுதிகளில் ரகசிய கேமராக்கள் உள்ளதா என சோதனை செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் சிறுமலை தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
விடுதிகளுக்கு சென்ற போலீசார் பயணிகள் அறை,குளியல் அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர்.