/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொதுநல வழக்கில் ஆதாரம் தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
/
பொதுநல வழக்கில் ஆதாரம் தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
பொதுநல வழக்கில் ஆதாரம் தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
பொதுநல வழக்கில் ஆதாரம் தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 13, 2024 07:21 AM
பழநி : பழநி அருகே கே.வேலுார் அசோக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுகிறது.
கலெக்டர், கனிமவள உதவி இயக்குனரிடம் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார், மனுதாரர் கூறும் புகாருக்கு ஒரு லாரியில் மண் கொண்டுசெல்லப்படுவதாக போட்டோ ஆதாரத்தை மட்டும் தாக்கல் செய்துள்ளார்.
எங்கெங்கு, யார், யார் சட்டவிரோதமாக மண் அள்ளுகின்றனர் என்ற ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.
பொத்தாம் பொதுவாக மேம்போக்கான புகாராக உள்ளது. பொதுநல வழக்குகளில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி போதிய ஆதாரம், ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்ய மனுதாரர் தவறிவிட்டார். இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.