/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மீண்டும் விலையில் உயர்ந்த முருங்கை
/
மீண்டும் விலையில் உயர்ந்த முருங்கை
ADDED : ஜூலை 09, 2024 09:17 PM

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை மீண்டும் அதிகரித்து கிலோ ரூ.110க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் பகுதிகளில் செடி முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. கோடை மழை காரணமாக முருங்கை செடிகளில் இருந்த பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்தன. இதனால் முருங்கைக்காய் விளைச்சல் கடுமையாக பாதித்தது. இதனால் வரத்து குறைய முருங்கைக்காய் விலை நாள்தோறும் அதிகரித்தபடி காணப்பட்டது. பற்றாக்குறையை போக்க மகாராஷ்டிரா நாசிக் பகுதி முருங்கைக்காய் வர கிலோ ரூ.200 க்கு விற்றது. இதன் வரத்தும் குறைய உள்ளூர் முருங்கைக்காய் வரத்து அதிகரித்த நிலையில் விலை குறைந்து கிலோ ரூ.70 க்கு விற்றது. இதுவும் வரத்து குறைய மீண்டும் விலை உயர்ந்து நேற்று கிலோ ரூ.110க்கு விற்றது.