/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தரம் உயர்ந்த தீயணைப்பு அலுவலகம்
/
தரம் உயர்ந்த தீயணைப்பு அலுவலகம்
ADDED : அக் 12, 2025 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி தீயணைப்பு துறை அலுவலகம் தரம் உயர்த்தப்பட்டு எம்.எல்.ஏ., குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.
பழநி புது தாராபுரம் ரோட்டில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் 21 மீட்பு படை வீரர்கள் பணிபுரிகின்றனர். தீயணைப்பு துறை அலுவலகம் தரம் உயர்த்தப்பட்டு இரண்டு புதிய நவீன மீட்பு வாகனங்கள், மீட்பு படை உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதனை எம்.எல்.ஏ., செந்தில்குமார் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார்.
தீயணைப்பு துறை கூடுதல் இயக்குனர் சரவணகுமார், மாவட்ட அலுவலர் விவேகானந்தன், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தி.மு.க., நகர தலைவர் வேலுமணி கலந்து கொண்டனர்