/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரத்தால் போக்குவரத்து பாதிப்பு நெடுஞ்சாலைத்துறை மெத்தனம்
/
மரத்தால் போக்குவரத்து பாதிப்பு நெடுஞ்சாலைத்துறை மெத்தனம்
மரத்தால் போக்குவரத்து பாதிப்பு நெடுஞ்சாலைத்துறை மெத்தனம்
மரத்தால் போக்குவரத்து பாதிப்பு நெடுஞ்சாலைத்துறை மெத்தனம்
ADDED : ஜூலை 10, 2025 03:16 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
நேற்று முன்தினம் சூறைக்காற்று வீசிய நிலையில் கடுகுதடி வனப்பகுதியில் மரம் விழுந்தது. நெடுஞ்சாலைத்துறை மரத்தை அகற்ற மெத்தனம் காட்டிய நிலையில் போலீசார்,தன்னார்வலர்கள், பொதுமக்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து இம்மலைப் பகுதியில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கிறது. மரத்தை துரிதமாக அகற்ற தீ அணைப்புத்துறை , நெடுஞ்சாலைத்துறை தனிக்குழு அமைக்க வேண்டும். இக்குழு பண்ணைக்காடு கொடைக்கானல் ரோட்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.