/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் அதிகரித்த ஆக்கிரமிப்பு; நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை பலகை

ADDED : டிச 02, 2024 04:41 AM
கொடைக்கானல் : கொடைக்கானல் மெயின் ரோட்டில் புற்றீசல் போல் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை பலகை அமைத்துள்ளது.
கொடைக்கானல் சுற்றுலா தலத்தில் ரோட்டோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைத்துறை அகற்றி வருகிறது.
ஒரு மாதமாக இப்பணி சுணக்கமடைந்து பாதியில் நிறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் கார்மேல்புரம் இடையே ரோட்டோரத்தில் பாறை, கற்களை அகற்றி இரவோடு இரவாக புற்றீசல் போல் கடைகள் அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.
சம்மந்தப்பட்ட இடத்தில் நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை பலகை அமைத்து அதில் நெடுஞ்சாலைத்துறை இடம் ஆக்கிரமிக்கவோ, வாகனம் நிறுத்த தடை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு எச்சரித்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் ஏரிச்சாலை பகுதி வரை ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. தொடரும் பட்சத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.