UPDATED : செப் 17, 2026 11:32 PM
ADDED : செப் 17, 2026 08:45 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி:திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் ஹிந்தி தின விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்து பேசுகையில், 'மக்களிடையே பண்பாட்டு பிளவுகளை குறைப்பதிலும், கல்வித்துறைகளின் இடையே ஒற்றுமையை வளர்ப்பதிலும் வட்டார, தேசியமொழிகள் பெரும் பங்கு வகிக்கின்றன' என்றார்.
தமிழ், இந்திய மொழிகள் புல தலைவர் ஆனந்தகுமார், கனரா வங்கி உதவி பொது மேலாளர் விஞ்சமூரி ராகுல் ஆகியோர் ஹிந்தி மொழி கற்பதன் அவசியத்தை பற்றி பேசினர். முன்னதாக பேராசிரியர் சலீம் பெய்க் வரவேற்றார். துறைத்தலைவர் கந்தாரே சந்து லட்சுமணன் நன்றி கூறினார்.
