/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பக்தர்கள் மீது அடக்குமுறையை மக்கள் ஏற்று கொள்ள மாட்டர்கள் ஹிந்து முன்னணி கண்டனம்

ADDED : பிப் 03, 2025 05:50 AM
திண்டுக்கல்: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முருக பக்தர்கள் மீது அடக்கு முறையை ஏவுவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்தது.
மாநில செயலர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது : திருப்பரங்குன்றம் மலையை காக்க முருக பக்தர்கள் அணி திரள்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியதற்காக, திண்டுக்கல் நகர், வேடசந்துார், பட்டிவீரன்பட்டி ஆகிய இடங்களில் சமுதாய அமைப்புகளைச் சார்ந்தவர்கள், ஹிந்து முன்னணி தொண்டர்கள் ,முருக பக்தர்கள் 10க்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை திருப்பரங்குன்றம் வாடகை புக்கிங் செய்யக்கூடாது என மிரட்டுகின்றனர். தமிழக அரசு அத்துமீறி போலீசாரை ஏவி இது போன்ற சட்ட விரோத கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு வெட்டுவோம் என பிரச்சனையை முதன் முதலில் கிளப்பியவர்கள் மத அடிப்படைவாத கட்சியைச் சார்ந்தவர்கள். அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. தற்போது முருக பக்தர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.