sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

எஸ்.டி.பி.ஐ.,யை தடை செய்ய ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

/

எஸ்.டி.பி.ஐ.,யை தடை செய்ய ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

எஸ்.டி.பி.ஐ.,யை தடை செய்ய ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

எஸ்.டி.பி.ஐ.,யை தடை செய்ய ஹிந்து முன்னணி வலியுறுத்தல்


ADDED : ஆக 20, 2025 11:21 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:''பி.எப்.ஐ., அமைப்பை போன்ற பயங்கவாத சிந்தனையுடன் செயல்படும் எஸ்.டி.பி.ஐ., அமைப்பை தடை செய்ய வேண்டும்,'' என, திண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில்குமார் கூறினார்.

அவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழா ஹிந்து பிரமாண்ட எழுச்சி திருவிழாக ஹிந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் நடக்க உள்ளது. 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவதுடன் 50 லட்சம் வீடுகளில் ஒரு அடி, அரை அடி சிலைகள் வைத்து வழி படவுள்ளனர்.

இந்தாண்டு நம்ம சுவாமி, நம்ம கோயில், நாமே காப்பாற்றுவோம் என்ற தலைப்பில் சதுர்த்தி விழா நடக்க உள்ளது.

பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் என்.ஐ.ஏ., ரெய்டு நடத்தப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆறாண்டுகளாக தொடர்ந்து கைது நடவடிக்கை நடந்து வருகிறது. ரெய்டு நடவடிக்கை எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்தவர்களிடம் நடக்கிறது. ஏற்கனவே கைதானவர்கள் பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்தவர்கள் தான்.

பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்த பிறகு பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளது. ஆனால் பி.எப்.ஐ., இயக்கத்தின் அரசியல் பிரிவு தான் எஸ்.டி.பி.ஐ., பெயர் மாறியிருக்கிறதே தவிர சிந்தனைகள் மாறவில்லை.

ஓட்டு வங்கிக்காக சிறுபான்மையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குகிறது. பி.எப்.ஐ., போன்றே எஸ்.டி.பி.ஐ., அமைப்பையும் தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 42 ஆயிரம் கோயில்கள் அறநிலையத்துறையின் கீழ் இருந்தது. தற்போது 36 ஆயிரத்து 250 மட்டுமே உள்ளது. 6 ஆயிரம் கோயில்களை காணவில்லை. இதுதான் அறநிலையத்துறையின் சாதனை. இதிலும் பல ஆயிரம் கோயில்களில் விளக்கேற்ற கூட ஆளில்லை. பல கோயிலகளில் நிலங்களை காணவில்லை.

முஸ்லிம்களின் ஜமாத், கிறிஸ்துவர்களின் திருச்சபைகள் அவரவர் மதத்தை காப்பது, பரப்புவது, பாதுகாப்பது என செயல்படுகின்றன. ஆனால் அறநிலைதுறையோ கோயில்களை அழிப்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறது. பல கோயில்களில் கும்பாபிேஷகம் நடத்தி விட்டதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். ஹிந்து மக்கள் உட்பட அனைவரும் ஓட்டளித்து வெற்றி பெற வைத்த முதல்வர் ஸ்டாலின் ஒரு கும்பாபிேஷகத்தில் கூட பங்கேற்கவில்லை. அனைத்து மக்களுக்குமான முதல்வராக ஸ்டாலின் இல்லை என்றார்.






      Dinamalar
      Follow us