ADDED : ஜன 28, 2026 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மதுரை கோட்ட ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் தாடிக்கொம்பு தனியார் மஹாலில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்து பேசினார்.
மாநில செயலாளர் முத்துக்குமார், சேவுகன் முன்னிலை வைத்தனர். திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும், மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும், ராமேஸ்வரத்தை புனிதத்தலமாக அறிவிக்கவேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் வினோத் ராஜ் நன்றி கூறினார்.

