/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
/
ஹிந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 24, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் நேருஜி நகரில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாட்டை நிறுத்த கோரி ஹிந்து மக்கள் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர். முறையான நடவடிக்கை இல்லாத நிலையில் வேடசந்துார் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலச் செயலாளர் மணிகண்டன், மாவட்டத் தலைவர் நாகராஜ், முழு நேர ஊழியர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜா பங்கேற்றனர்.