/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி உதவி கமிஷனர் மீது ஹிந்து தமிழர் கட்சி புகார்
/
பழநி உதவி கமிஷனர் மீது ஹிந்து தமிழர் கட்சி புகார்
ADDED : ஜன 09, 2024 05:50 AM

பழநி : பழநி முருகன் கோயில் இணை கமிஷனரிடம் கோயில் உதவி கமிஷனர் லட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் புகார் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: பழநி கோயிலுக்கு பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், நாதஸ்வரம் தவில் இசைவாத்தியங்களுடன் படிப்பாதை வழியாக கோயில் வருகின்றனர். ஜன.5ல் கரூர் மாவட்டம் தோகைமலை சேர்ந்த பக்தர்கள் சென்ற போது இசை கருவிகளை இசைக்க பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி வாசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினர்.
40 ஆண்டுகளுக்கு மேலாக வாசித்து வருகிறோம் என்ற போதும் எங்களுக்கான உத்தரவின் படி அனுமதிக்க இயலாது என கூறி உள்ளார்.
இதையடுத்து இசைக்கலைஞர்கள் உதவி ஆணையர் லட்சுமியிடம் முறையிட சென்றபோது, உங்களுக்கு சர்டிபிகேட் கொடுத்தது யார். நீங்கள் வாசிப்பது இசையா என கூறி உள்ளார்.
இசை நன்றாகவே வாசித்தாலும் கோயிலில் வாசிக்க அனுமதி கிடையாது.
இசை கலைஞர்களின் சர்டிபிகேட்டை ரத்து செய்து விடுவேன். பெண் பக்தர்கள் அநாகரிகமாக ஆடி வருகின்றனர். பழநியில் கடை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி உள்ளார்.
இவர் ஏற்கனவே பழநி கோயிலில் கோழி ஏலம் விடும்போது பக்தர்களிடம் சச்சரவுகளையும் பிரச்னைகளையும் உருவாக்கி வருகிறார்.
கோயில் நிர்வாகம் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.