/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிறிஸ்தவ சர்ச் அலங்கார வளைவுக்கு மாநகராட்சி நிதி ஹிந்து தமிழர் கட்சி ராமரவிக்குமார் எதிர்ப்பு

ADDED : ஏப் 18, 2025 06:43 AM
திண்டுக்கல்: கிறிஸ்தவ வழிபாட்டு தலத்துக்கு அலங்கார வளைவு அமைக்க திண்டுக்கல் மாநகராட்சி நிதியில் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்ததற்கு ஹிந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராமரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை : திண்டுக்கல் மாநகராட்சியில் நேற்று முன்தினம் நடந்த அவசரக் கூட்டத்தில் முத்தழகுப்பட்டியில் உள்ள சர்ச்சிற்கு அலங்கார நுழைவாயில் அமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓட்டு வங்கி நாடக அரசியலுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மாநகராட்சி நிர்வாகம் இதுவரை ஹிந்து, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.வரி செலுத்தும் மக்களின் அடிப்படை தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் அவர்களின் வரிப் பணத்திலிருந்து ரூ.10 லட்சத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் ஓட்டுக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மாநகராட்சி நிர்வாகம் இந்த தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தில் தடை உத்தரவுப் பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.