/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
/
வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
ADDED : மே 04, 2025 04:09 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கட்டட பொறியாளர்கள் சங்கம், கட்டட பொறியாளர்கள் தொண்டு அறக்கட்டளை இணைந்து தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., மகாலில் கட்டுமானம், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது.இதை எம்.பி., சச்சிதானந்தம் துவக்கி வைத்தார்.
மேயர் இளமதி, முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் முன்னிலை வகித்தனர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், திருவருப்பேரவை பொருளாளர் காஜா மைதீன், மாநில பொறியாளர் நல கூட்டமைப்பு தலைவர் விஜயபானு, துணைத்தலைவர் பிரபு, செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் அசோகன், துணைச்செயலாளர் கலியமூர்த்தி, மண்டல தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் டேவிட் பிராங்கிளின், கட்டட பொறியாளர் நலவாழ்வு சங்க தலைவர் அப்துல்சமது, செயலாளர் பாண்டிபிரபு, பொருளாளர் கனகராஜ், திண்டுக்கல் கட்டட பொறியாளர்கள் சங்க தலைவர் தங்கதுரை, செயலாளர் குணசீலன், பொருளாளர் சிவபாலன், கட்டட பொறியாளர்கள் தொண்டு அறக்கட்டளை தலைவர் குமரேசன், செயலாளர் பெஞ்சமின் ஆரோக்கியம், பொருளாளர் ஜான் சந்தியாகு, கண்காட்சி கமிட்டி தலைவர் ரியாஸ் அகமது, செயலாளர் லட்சுமி நாராயணன், பொருளாளர் விக்டர் தனபால் பங்கேற்றனர். இக்கண்காட்சி இன்றும், நாளையும் நடக்கிறது.