/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு தோட்டக்கலைத்துறை கள ஆய்வு
/
பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு தோட்டக்கலைத்துறை கள ஆய்வு
பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு தோட்டக்கலைத்துறை கள ஆய்வு
பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு தோட்டக்கலைத்துறை கள ஆய்வு
ADDED : ஜூலை 20, 2025 04:57 AM
கொடைக்கானல்: - கொடைக்கானல் மலைப்பகுதியில் பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.
இம்மலைப்பகுதியில் ஏராளமான ஏக்கரில் பேரிக்காய் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது. சில ஆண்டாக விளைச்சல் பாதிப்பு நீடிக்கிறது.
இந்நிலையில் தோட்டக் கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சதாகர்ராவ், தோட்டக்கலை உதவி இயக்குனர் சொர்ணலதா பள்ளங்கி, விப்பட்டியில் கள ஆய்வு மேற்கொண்டனர். மரங்களில் உள்ள களைகளால் கம்பளி பூச்சி தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தோட்டங்களில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்.
இதை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 1 லிட்டர் தண்ணீரில் 3 மி.லி., அளவில் கலந்து மரங்களில் மேற்புரத்தில் தெளிப்பது அல்லது ஸ்பினோசெட் மருந்தினை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மி.லி., என்ற அளவில் கலந்து மரங்களின் அனைத்து பகுதியிலும் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்தனர்.