/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வதந்திகளை நம்ப வேண்டாம் தோட்டக்கலை துறை அறிவிப்பு
/
வதந்திகளை நம்ப வேண்டாம் தோட்டக்கலை துறை அறிவிப்பு
ADDED : ஏப் 06, 2025 05:25 AM
பழநி : ''பழநி பகுதியில் விளையும் தர்பூசணிகளில் ரசாயன ஊசி செலுத்தப்படவில்லை'' என தோட்டக்கலை துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
பழநி பகுதியில் ஆண்டிபட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் 370 ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்து வரும் தர்பூசணியில் கூடுதல் நிறம் பெறுவதற்காக ரசாயன ஊசி செலுத்தப்படுவதாக தகவல் பரவி வருகிறது.
இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் சிரமம் அடைகின்றனர். தோட்டக்கலை துறையினர் அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணி நிலங்களில் ஆய்வு செய்தனர். நிறத்திற்காகவும் சுவைக்காகவும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படவில்லை என்பது தெரிந்தது. இயற்கையாகவே பழங்களில் நிறமும் சுவையும் உள்ள நிலையில் ரசாயனம் செலுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யப்பட்டது.
தர்பூசணி பழங்களில் லோகோபின் என்ற மூலப் பொருளால் தான் நிறமும் சுவையும் கிடைக்கிறது. சமூக வலைதளவில் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தோட்டக்கலைத் துறையினர்தெரிவித்துள்ளனர்.

