ADDED : ஜூலை 18, 2026 01:33 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் முத்தரசு தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாலாஜி, செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இத்திட்டம் உழவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. அலுவலர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படுத்துகிறது.
தோட்டக்கலைத்துறை பணிக்காக படித்து பட்டம் பெற்றவர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.
