ADDED : ஜூன் 10, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: திருக்கூர்ணம் ஊராட்சி திருக்கூர்ணத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் சேதமடைந்த நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு கூரை ஓடுகள் பிரித்து எடுத்து செல்லப்பட்டன.
புதிய கட்டடம் கட்டுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக அங்குள்ள நுாலகத்தில் செயல்பட்டு வருகிறது. திருக்கூர்ணம் ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜகோபால் கூறியதாவது: பொதுப்பணித்துறை சார்பில் அகற்றி எடுத்து சென்றனர். ஆனால் இன்னும் கட்டடம் கட்டுவதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை. நிதியை ஒதுக்கி கட்டடப் பணிகளை துவக்க வேண்டும் என்றார்.