ADDED : பிப் 09, 2024 05:10 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறையில் முன் விரோதத்தால் இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்டதில் இருவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.
பூம்பாறை சேர்ந்தவர் குணால் 24. இவர் திருப்பூரில் வேலை செய்கிறார்.
பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் விழாவிற்கு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு குண்டுபட்டி செல்லும் ரோட்டில் குணால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
இதுதொடர்பாக போலீசார் பூம்பாறை தர்மமந்திரி 23, காளி 22, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சில ஆண்டுகளுக்கு முன் தர்மமந்திரியின் சகோதரியை குணால் காதலித்தார்.
இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சகோதரி தற்கொலை செய்தார். மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் இறந்தார். இதற்கு காரணமான குணால் மீது ஆத்திரத்தில் இருந்த இருவரும் நேற்று முன்தினம் கொலை செய்ததாக தெரிந்தது. கொடைக்கானல் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

