ADDED : நவ 04, 2024 07:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: கனமழையால் கோபால்பட்டியில் கூலித்தொழிலாளியின் வீடு இடிந்ததில் பெண் காயமானார்.
கோபால்பட்டி கோம்பைபட்டி ஊராட்சி கே.அய்யாபட்டியை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அழகர்சாமி. இவரது மனைவி மேரி 48,பழமையான மண் சுவற்றால் ஆன ஓட்டு வீட்டில் வசித்தனர். சில நாட்களாக சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம் சுற்றிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் நேற்று இரவு மேரி வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் மேரி,காயமானார். ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி,வருவாய் துறையினர் சேதமான பகுதிகளை பார்வையிட்டனர். திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் மீனாதேவி,பாதிக்கப்பட்ட அழகர்சாமி,மேரியை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்தார்.