/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்யவிடில் சீல் : கலெக்டர்
/
இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்யவிடில் சீல் : கலெக்டர்
இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்யவிடில் சீல் : கலெக்டர்
இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்யவிடில் சீல் : கலெக்டர்
ADDED : ஜூலை 11, 2025 03:20 AM
திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு இல்லங்கள், விடுதிகள் முறையாக அடுத்த ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யப்படவில்லையெனில் சீல் வைக்கப்படும்'' என கலெக்டர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குழந்தைகள், முதியோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள், மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை பதிவு , உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும். பதிவு பெறாத இல்லங்கள் , விடுதிகள் உரிய முறையில் இணையதளத்தின் வாயிலாக ,அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒருமாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.