/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறந்தவெளி சாக்கடையில் மனித கழிவு.. கண்காணியுங்க! கண்டுக்காத நிலையால் மக்கள் தவிப்பு

ADDED : நவ 14, 2024 07:13 AM

மாவட்டத்தில் 306 ஊராட்சிகள், நகராட்சி, பேரூராட்சிகள் உள்ளன. பொதுவாக நகர் ,ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் நிலையில் அதில் கழிப்பறைகளுக்கு செப்டிக் டேங்க் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற நெறிமுறை உள்ளது.
இதை பெயரளவிற்கு செயல்படுத்தப்படும் நிலையில் எஞ்சிய பகுதிகளில் நேரடியாக திறந்தவெளி சாக்கடைகளில் மனிதக்கழிவுகள் விடும் போக்கு உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவல் ஏற்படும் அபாய நிலை உள்ளது.இதை கண்காணிக்க வேண்டிய நகர் , ஊரக உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த அலுவலர்கள் ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளனர்.
உள்ள ஊராட்சிகளில் இத்தகைய போக்கு அதிகரித்து உள்ளது .திறந்தவெளி சாக்கடையில் விடப்படும் மனிதக்கழிவுகளால் கொசுக்கள் அதிகரித்து நோய்த்தொற்று ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் சாக்கடைகளில் நேரடியாக மனிதக்கழிவுகள் கலக்கப்படுவதை தவிர்க்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.