/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடையில் மனித கழிவு; கொசுக்களால் தொற்று கொடைக்கானல் 12 வது வார்டில் தொடரும் அவலம்
/
சாக்கடையில் மனித கழிவு; கொசுக்களால் தொற்று கொடைக்கானல் 12 வது வார்டில் தொடரும் அவலம்
சாக்கடையில் மனித கழிவு; கொசுக்களால் தொற்று கொடைக்கானல் 12 வது வார்டில் தொடரும் அவலம்
சாக்கடையில் மனித கழிவு; கொசுக்களால் தொற்று கொடைக்கானல் 12 வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : ஜூலை 25, 2025 02:59 AM

கொடைக்கானல்: சாக்கடையில் மனித கழிவு,கொசுக்களால் தொற்று என கொடைக்கானல் நகராட்சி 12 வது வார்டில் பிரச்னைகள் கொட்டி கிடக்கின்றன.
பிலிஸ் விலா, பள்ளிவாசல் தெரு, ஆர்.சி.ஸ்கூல் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பலரும் பாதிக்கின்றனர். துார்வாரப்படாத சாக்கடையால் கொசுக்கள் கொட்டமடிக்கின்றன, சாக்கடையில் மனித கழிவுகளை விடுவதால் நோய் தொற்றுக்கு வழி வகுக்கிறது. சரிவர அள்ளப்படாத குப்பையால் பலரும் முகம் சுளிக்கின்றனர். சேதமடைந்த குடிநீர் தொட்டியால் தண்ணீர் பிரச்னை உள்ளது. தெரு நாய், காட்டுமாடு நடமாட்டம் மக்கள் பீதியில் உள்ளனர். இதோடு தெருக்களில் ஆக்கிரமிப்புகளும் அதிகளவில் உள்ளன.
விபத்தில் சிக்கும் அபாயம் சலீம்ராஜா, வணிகர் : ஆர்.சி. பள்ளி அருகில் உள்ள சாக்கடை மேல்மூடி அமைக்காமல் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அடிக்கடி மின்தடை தொடர்வதால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். வார்டில் ஏராளமானவர்களுக்கு பட்டா இல்லாத நிலை உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. கவுன்சிலர் வார்டை கண்டு கொள்வதில்லை. தெரு விளக்குகளும் சரிவர எரிவதில்லை.
பெயரளவில் ரோடு பணி மெடோனா, இல்லத்தரசி : தெருக்களில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. சாக்கடை கட்டமைப்பு சேதமடைந்து கழிவு நீர் ரோட்டில் செல்கிறது.
செப்டிக் டேங்க் அமைக்காமல் மனித கழிவுகள் சாக்கடையில் விடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ரோடுகள் உரிய வழிகாட்டு நெறிமுறைப்படி அமைக்காமல் பெயரளவிற்கு ரோடு பணி நடந்துள்ளது.
பொது பொதுக்குழாயை முறைகேடாக பயன்படுத்தும் போக்குள்ளது. மேல்நிலை தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. பெருச்சாலிகள் வீட்டு உடமைகளை சேதப்படுத்தி அச்சுறுத்துகிறது. கொசுக்கள் அதிகரித்து உடல் ஒவ்வாமை என தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
சுகாதாரமான வார்டாக மாறும் யாஷ்மின், கவுன்சிலர், (தி.மு.க.,) : ரூ. 2 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. சாக்கடையில் மனித கழிவுகள் செல்லும் நிலையை தவிர்க்க நகராட்சி மூலம் நடவடிக்கை எடுத்து செப்டிக் டேங்க அமைக்க வலியுறுத்தப்படும்.
மின்தடை பிரச்னைக்கு மின்வாரியம் மூலம் புகார் அளித்த போதும் ஆண்டு கணக்கில் சரி செய்யாத நிலை உள்ளது. சாக்கடை கட்டமைப்பு ஏற்படுத்தி துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டா இல்லாதவர்கள் விவரங்கள் சேகரித்து அடங்கலில் ஏற்ற நடவடிக்தை எடுக்கப்பட்டுள்ளது. மாடுவதைக்கூடம் துரிதமாக செயல்பட நகராட்சியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரமான வளர்ச்சியான வார்டாக மாற்ற தேவையான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.