/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இங்கிலாந்து பாதிரியாருக்கு கொடை விழா முளைப்பாரி எடுத்த நுாற்றுக்கணக்கான பெண்கள்

ADDED : அக் 06, 2025 05:58 AM

வத்தலக்குண்டு : வத்தலகுண்டு அருகே இங்கிலாந்து பாதிரியாரை நினைவு கூறும் வகையில், நுாற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர்.
ஜி.கல்லுப்பட்டியில் ஆர்.டி.யு தொண்டு நிறுவனத்தை நிறுவியவர் ஜேம்ஸ் கிம்டன். இங்கிலாந்தில் பிறந்த இவர் 50 ஆண்டு காலம் சமூக சேவையாற்றினார். ஆதரவற்றோர் காப்பகங்கள், கல்வி நிறுவனங்கள் என திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களை தத்தெடுத்து அடித்தட்டு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தார். வயது மூப்பு காரணமாக ஜேம்ஸ் கிம்டன் இறந்தார். தாத்தா என அனைவராலும் அழைக்கப்படும் ஜேம்ஸ் கிம்டன் நினைவு நாளை கிராம மக்கள் கொடை விழாவாக கொண்டாடி வருகின்றனர். நேற்று நடந்த கொடை விழாவில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஜேம்ஸ் கிம்டன் சிலை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கிராம பெண்கள் நூற்றுக்கணக்கானோர் முளைப்பாரி எடுத்து வந்து ஜேம்ஸ் கிம்டனை நினைவு கூர்ந்தனர்.