ADDED : மார் 18, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு; திண்டுக்கல் நான்கு வழி சாலையில் டூவீலரில் சென்றபோது சுவற்றில் டூவீலர் மோதியதில் கணவன், மனைவி பலியாகினர்.
ஆத்துாரை சேர்ந்தவர் கருப்பையா 54. இவரது மனைவி பாப்பாத்தி 50. இருவரும் டூவீலரில் மதுரைக்கு சென்று விட்டு ஊர் திரும்பினர். கொடைரோடு சுங்கச்சாவடியை அடுத்த தளி மேம்பாலத்தில் சென்ற போது டூவீலரின் பம்பர் பக்கவாட்டு சுவற்றில் மோதியது. இதில் பாப்பாத்தி கீழே விழுந்து பலியானார். பாலத்தில் இருந்து 40 அடி பள்ளத்தில் துாக்கி வீசப்பட்ட கருப்பையாவும் இறந்தார். அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.