sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 நிதி நிறுவனத்தில் ரூ.54 லட்சம் மோசடி கணவர் கைது; மனைவி, மாமனார் மாயம்

/

 நிதி நிறுவனத்தில் ரூ.54 லட்சம் மோசடி கணவர் கைது; மனைவி, மாமனார் மாயம்

 நிதி நிறுவனத்தில் ரூ.54 லட்சம் மோசடி கணவர் கைது; மனைவி, மாமனார் மாயம்

 நிதி நிறுவனத்தில் ரூ.54 லட்சம் மோசடி கணவர் கைது; மனைவி, மாமனார் மாயம்


ADDED : பிப் 26, 2026 07:03 AM

Google News

ADDED : பிப் 26, 2026 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனத்தில் ரூ.54 லட்சம் மோசடி செய்த கணவரை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான மனைவி, மாமனாரை தேடுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் 44. இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் இந்தியன் காம்ப்பளக்சில் குமரன் ஆட்டோ பைனான்ஸ் எனும் பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 6 பேர் பங்குதாரர்களாக உள்ளனர். 2018 முதல் ஒட்டன்சத்திரம் சாமியார்புதுாரை சேர்ந்த தானிஷ் டோரா 24 ,வரவு செலவு கணக்கு விபரங்களை கவனித்து வந்தார். அதே ஊரை சேரந்த கவியரசன் 24, ஊழியராக பணியாற்றினார். 2024ல் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். கணவன், மனைவி நிதி நிறுவனத்தில் வேலை செய்துவந்த நிலையில் வரவு, செலவுக்கணக்குகளில் செல்வராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டது. 3 ஆண்டுகளுக்கான கணக்கை தணிக்கை செய்தபோது தானிஷ் டோரா, கவியரசன், அப்பள வியாபாரம் செய்தவந்த தானிஷ் டோராவின் தந்தை ஜோசுபாலன் ஆகியோர் சேர்ந்து ரூ.64லட்சம் கையாடல் செய்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து கேட்டபோது, அந்தப்பணத்தில் நகை, நிலம், கார் வாங்கி சொத்து சேர்த்திருப்பதும், அவற்றை விற்று பணத்தை திருப்பி செலுத்துவதாகவும் கூறி உள்ளனர். இதை நம்பிய செல்வராஜ் பணத்தை திருப்பி செலுத்த காலஅவகாசம் கொடுத்தார். 2025ல் ரூ.10லட்சத்தை மட்டும் கொடுத்த அவர்கள் மீதப்பணத்தை கொடுக்காமல் தலைமறைவானார்கள். மூவரின் அலைபேசிகளும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ., கோபாலகிருஷ்ணன் விசாரித்தனர்.இதில் கவியரசனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us