/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க.,வில் தேர்தலில் நிற்க கூட ஆட்கள் வர மாட்டார்கள்; அமைச்சர் பெரியசாமி கிண்டல்
/
அ.தி.மு.க.,வில் தேர்தலில் நிற்க கூட ஆட்கள் வர மாட்டார்கள்; அமைச்சர் பெரியசாமி கிண்டல்
அ.தி.மு.க.,வில் தேர்தலில் நிற்க கூட ஆட்கள் வர மாட்டார்கள்; அமைச்சர் பெரியசாமி கிண்டல்
அ.தி.மு.க.,வில் தேர்தலில் நிற்க கூட ஆட்கள் வர மாட்டார்கள்; அமைச்சர் பெரியசாமி கிண்டல்
ADDED : பிப் 26, 2026 07:06 AM
செம்பட்டி: தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., பலவீனமாகி விட்டது. தேர்தலில் நிற்க கூட ஆட்கள் வர மாட்டார்கள் '' என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்துாரில் அவர் கூறியதாவது:
பழனிசாமி 2021ல் ஆட்சியை முடிக்கும் போது ரூ. 5 லட்சம் கோடி கடனை விட்டுச் சென்றார். மீண்டும் வரியை உயர்த்த ரூ.10,000 தருகிறேன் என்கிறார்.
தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்திபடி அள்ளிவிடுகிறார். ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தாலும் அவரால் முதல்வராக முடியாது.
அ.தி.மு.க., அஸ்தமனமாகி பல நாட்கள் கடந்துவிட்டது. இனி தமிழகத்தில் எந்த காலத்திலும் அ.தி.மு.க., ஆட்சி அமைக்க முடியாது. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்ததால் அக்கட்சி மேலும் பாதாளத்திற்கு சென்று விட்டது.
தமிழக மக்கள் அந்த கூட்டணிக்கு ஒருபோதும் ஓட்டளிக்க மாட்டார்கள். சசிகலா கடைசிவரை போராடி தற்போது புதிய கட்சி தொடங்கி விட்டார். அ.தி.மு.க., மக்கள் ஆதரவை இழந்து சுக்குநுாறாக உடைந்து விட்டது. தேனி, மதுரை மாவட்டங்களில் அக்கட்சி பலவீனம் அடைந்துவிட்டது. திண்டுக்கல்லிலும் ஒன்றும் இல்லை. அ.தி.மு.க., சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் நிற்க கூட ஆட்கள் வர மாட்டார்கள்.
தென்மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றிபெற வாய்ப்புள்ளது. வேலுாரில் நடந்த பிரசாரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் பேசி உள்ளார். இந்தியாவிலேயே தமிழகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது.
தி.மு.க., ஆட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு சிறப்பாக கையாளப்படுகிறது. இதனால் மீண்டும் தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.

