ADDED : செப் 27, 2024 07:12 AM
ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு அறிவு சார் மையத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவ மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற சிறப்பு வழிகாட்டுதல் முகாம் நடந்தது.ஐ. வாடிப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜோதீஸ்வரன் தலைமை வகித்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி முன்னிலை வகித்தார். நகராட்சி பயிற்சி கமிஷனர் நந்தினி, நான் முதல்வன் திட்ட மேலாளர் சிங்கத்தேவன், பழநி மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா, திறன் மேம்பாட்டு மைய உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, நகராட்சி தலைவர் திருமலை சாமி, ஒன்றிய தலைவர் அய்யம்மாள், ஊராட்சித் தலைவர்கள் முருகானந்தம், அமுதா, மாவட்ட சமூக நலத்துறை சேர்ந்த சூர்யா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கதிரேசன், ஒன்றிய கவுன்சிலர் கண்மணி கலந்து கொண்டனர்.

