/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முல்லை பெரியாறு அணைக்காக மீண்டும் போராடுவேன்: வைகோ
/
முல்லை பெரியாறு அணைக்காக மீண்டும் போராடுவேன்: வைகோ
முல்லை பெரியாறு அணைக்காக மீண்டும் போராடுவேன்: வைகோ
முல்லை பெரியாறு அணைக்காக மீண்டும் போராடுவேன்: வைகோ
ADDED : அக் 24, 2025 02:40 AM
திண்டுக்கல்: 'முல்லை பெரியாறு அணைக்காக மீண்டும் போராடுவேன்'' என ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: நடிகர் விஜய் பொதுவாழ்விற்கு வந்துள்ளார். பொதுவாழ்விற்கு யார் வந்தாலும் வரவேற்கவேண்டியது தான். கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிர் பலியானது விஜய்க்கு அனுபவம் இல்லை என்பதை காட்டுகிறது. தமிழகத்தில் பா.ஜ., கால் ஊன்ற மக்கள் இடம் தரமாட்டார்கள்.
முல்லை பெரியாறு அணைக்காக போராட்டம், பேரணி நடத்தி அதில் வெற்றி கண்டுவிட்டோம் என நினைக்கையில் கேரளாவை சேர்ந்த அமைப்பு தொடுத்த வழக்கில், மீண்டும் முல்லை பெரியாறு அணை தொடர்பான கோரிக்கையை பரிசீலனை செய்யலாம் என கூறியிருக்கிற தீர்ப்பு பேரிடியாக உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் இதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை வழிகாட்டுதல்களை தாண்டி இந்த விஷயம் போகாது என நம்புகிறேன். ஒருவேளை சென்றால் அதை எதிர்த்து நிச்சயம் சட்டரீதியாக போராடுவேன்.
இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய இடத்தில் தி.மு.க., உள்ளது. பிற மாநிலங்களுக்கு திசை காட்டும் கருவிபோல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டி.ஜி.பி., நியமனத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறது என அமைச்சர் ரகுபதி சொன்னது சரிதான். கூட்டணியில் சீட் ஒதுக்கீடு பற்றி நாங்கள் பேசியது கிடையாது. கட்சியின் அங்கீகாரத்தை தக்கவைப்பதற்கும், காப்பாற்றுவதற்கும் சில விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்திருக்கிறது. அதை பின்பற்றி நாங்கள் போட்டியிடுவோம். இவ்வாறு கூறினார்.

